விட்டமின் D எலும்பு வலிமைக்குதான் முதல் முன்னுரிமை.
அது கொஞ்சம் குறைந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும்.
அதன் குறைபாடு அதிகரித்தால் கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
விட்டமின் டி குறைபாடு அறிகுறிகள் : உடல் சோர்வு,
முதுகு மற்றும் இடுப்பு வலி,
மூட்டு வலி,
ஆறாத காயம்,
மன அழுத்தம் அதிகரித்தல்,
முடி உதிர்வு போன்ற அறிகுறிகளை சந்திப்பீர்கள்.
உங்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது எனில் இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
அவை என்னென்ன பார்க்கலாம்.
முட்டை :
முட்டையில் புரோட்டீன் மட்டுமன்றி விட்டமின் D-யும் நிறைவாக உள்ளது. அதன் மஞ்சள் கரு, கால்சியம் மற்றும் பல வகை தாதுக்களையும் உள்ளடக்கியது, எனவே, விட்டமின் D குறைபாட்டை ஈடு செய்ய முட்டை சாப்பிடுவது நல்லது.
பால் :
பாலில் கால்சியம் சத்து மற்றும் விட்டமின் D நிறைந்துள்ளது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிப்பது விட்டமின் D குறைபாட்டை தவிர்க்க உதவும்.
கீரை :
கீரையில் புரதச்சத்து இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே..
ஆனால் அதில் விட்டமின் D-யும் இருப்பது தெரியுமா..? மருத்துவர்களும் வாரம் ஒரு முறையேனும் கீரை சாப்பிடுங்கள் என சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
இது விட்டமின் D மட்டுமன்றி பல ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது.
பனீர் :
பனீரும் கால்சியம் சத்தின் வளமான ஆதாரமாகும்.
அதோடு எலும்புகளுக்கு தேவையான விட்டமின் டியையும் அளிக்கிறது.
எனவே இதையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சோயாபீன் :
உடல் எடை குறைக்க முயற்சி செய்வோர் தங்கள் டயட்டில் சோயாபீன் சேர்த்துக்கொள்வார்கள். ஏன் தெரியுமா..?
அதில்
புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, வைட்டமின் பி, துத்தநாகம், ஃபோலேட், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது எலும்புகளை பாதுகாப்பது மட்டுமன்றி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் தவிர்க்க உதவுகிறது.
No comments:
Post a Comment