Saturday, July 31, 2021

இட்லி

 

👉 தினமும் நான்கு இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரிகள் உடலுக்கு கிடைக்கும்.

 👉 இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

 👉 வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது.

 👉 வயிற்று புண்கள் ஆறுவதுதோடு செரிமான உறுப்புக்கள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.

👉 இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்கு பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தியம் சேர்த்துக்கொள்வது நல்லது.




Sunday, July 4, 2021

வாழை

 சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும் போது, 

அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாடில் கலந்து விடும்.

இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம், மற்றும் காரோட்டின் ஆகியவை நமக்கு கிடைக்கின்றன.

வாழை இலையின் சிறப்பம்சமே,அதன் குளிர்ச்சி தன்மை தான். 

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலை முடி கருப்பாக இருக்கும். வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்து பாககங்களுமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள் உள்ளவைதான்.




பூட்டாங் கயிறு

ஒரு ஆன்மீக சொற்பொழிவில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறிய ஒரு தத்துவம்.



மாட்டுவண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும். 

வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு.

ஆனால், அறிவுள்ள மாட்டால் வண்டியை தானே பூட்டி கொள்ள முடியாது. 

அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.

வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவன் உள்ளான்.

அவன் தான் பூட்டாங் கயிற்றால் வண்டியையும், மாட்டையும் இணைத்து இயக்குகிறான். 

பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் மாட்டையும், வண்டியையும் தனித்தனியாக பிரித்து வைத்து விடுவார்.

நம் உடலுக்கு பெயர் அசித்து. ஆன்மா பெயர் சித்து.

ஆன்மாவிற்கு அறிவு உண்டு.

உடலுக்கு அறிவு கிடையாது.

இரண்டும் தானே இணைந்து செயல் பட முடியாது.

இறைவன் எனும் வண்டிக்காரன், பிராண வாயு எனும் பூட்டான் கயிற்றால் உடலையும், ஆன்மாவையும் இணைத்து இயக்கி கொண்டு உள்ளார். 

வாழ்க்கை பயணம் முடித்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து விடுகிறார். 

அதற்கு மரணம் என்று பெயர்.

மரணம் வரும்வரை இறைவனை வணங்கி ஆன்மா சாந்தி அடையுங்கள்.





பூமிக்குள் :

  பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் .  பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்...