Sunday, July 4, 2021

பூட்டாங் கயிறு

ஒரு ஆன்மீக சொற்பொழிவில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறிய ஒரு தத்துவம்.



மாட்டுவண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும். 

வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு.

ஆனால், அறிவுள்ள மாட்டால் வண்டியை தானே பூட்டி கொள்ள முடியாது. 

அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.

வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவன் உள்ளான்.

அவன் தான் பூட்டாங் கயிற்றால் வண்டியையும், மாட்டையும் இணைத்து இயக்குகிறான். 

பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் மாட்டையும், வண்டியையும் தனித்தனியாக பிரித்து வைத்து விடுவார்.

நம் உடலுக்கு பெயர் அசித்து. ஆன்மா பெயர் சித்து.

ஆன்மாவிற்கு அறிவு உண்டு.

உடலுக்கு அறிவு கிடையாது.

இரண்டும் தானே இணைந்து செயல் பட முடியாது.

இறைவன் எனும் வண்டிக்காரன், பிராண வாயு எனும் பூட்டான் கயிற்றால் உடலையும், ஆன்மாவையும் இணைத்து இயக்கி கொண்டு உள்ளார். 

வாழ்க்கை பயணம் முடித்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து விடுகிறார். 

அதற்கு மரணம் என்று பெயர்.

மரணம் வரும்வரை இறைவனை வணங்கி ஆன்மா சாந்தி அடையுங்கள்.





No comments:

Post a Comment

பூமிக்குள் :

  பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் .  பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்...