காட்டில் சிங்கம் ஒன்று அயர்ந்து படுத்துக் தூங்கி கொண்டு இருந்தது. அப்பொழுது அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.
அதுவரை சும்மா இருந்த சேவல் கொக்கரக்கோ எனக் கூற ஆசைப்பட்டு உடன் சத்தமாக கூவியது.
சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும் நன்றாகத் தூங்கித் கொண்டிருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.
ஒருவரையும் காணவில்லை ஆதலால் மறுபடியும் படுத்து தூங்கியது சிங்கம்.படுத்துக் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.சேவலின் சத்தம் காரணமாக சிங்கத்தால் தூங்க முடியவில்லை.
கலவரமடைந்து எழுந்த சிங்கம் மரத்தின் மேலே பார்த்தது, சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.
"ஏய், ஏன் இப்படி காட்டுத்தனமாக கத்துகிறாய்? என் தூக்கத்தை கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது.
நான் எவ்வளவு அழகாக பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கிறாயே.
நான் இன்று மிகவும் மகிழிச்சியாக இருக்கிறேன்.
அதனால் பாடிக் கொண்டுதான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ "என அதிக சப்தத்துடன் கூவியது.சிங்கம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதன் இடத்தை மாற்றிக்கொண்டு வேறிடத்துக்கு ஓடும் பொழுது, அந்த வழியில் இருந்த ஒரு கழுதையை பார்க்காமல் ஓடியது, சிங்கம்.
ஆனால் கழுதையோ, சிங்கம் தன்னை கண்டு தான் பயந்து ஓடுகிறது என நினைத்து கத்தியது.
சிங்கம், திரும்பி வந்து கழுதையைத் தாக்கி கொன்றது.
நீதி:
வீண் தற்பெருமை வேதனையில் தான் முடியும்.
This comment has been removed by the author.
ReplyDeleteRead the story and give your comments.
ReplyDelete