ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.
“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.Wednesday, June 23, 2021
ஒரு குட்டி கதை
Saturday, June 12, 2021
நமக்கு தேவையானவை
1. தேவையானால் மட்டும் பேசு.
2. தேவையில்லாத அறிவுரை உனக்கே பாதகமாகும்.
3. எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.
4. சோம்பி திரியாதே.
5. தவறை திருத்தி கொள்.
6. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
கோபம் குறைய சிறிய வழிமுறைகள்
1. பேசுவதுற்கு முன் யோசியுங்கள்.
2. கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள், சிறிது நேரம் அமைதியாய் இருந்து பாருங்கள்.
3. "ஆழ்ந்த சுவாசம்" போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.
Monday, June 7, 2021
குறை ஒன்றும் இல்லை
ஒரு நாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் இருந்தது.
மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள், அதன் முன் தோன்றி காட்சி கொடுத்தார்.
அழகிய மயிலே உன் தவத்தை கண்டு உள்ளம் மகிழ்ந்தோம்.
உன் தவத்தின் நோக்கம் என்ன என்று சொல், என்றார் கடவுள்.
எனக்கு நீண்ட நாளாக ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது.
சரி, என்னிடம் சொல். நான் கேட்கிறேன் என்றார் கடவுள் ஆதரவாக.
என் குரலே எனக்கு பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே என மயில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.
அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல், நீதான் பறவைகளில் அழகானவன்.
உன் கழுத்து அழகும்,தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்குக்காவது படைக்கப்பட்டுள்ளதா.?
நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா என கடவுள் சொன்னாலும் மயில் சமாதானம் அடையவில்லை.
நீங்கள் சொல்வதுயெல்லாம் உண்மைதான் இருப்பினும்,என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா? என்றது மயில்.
எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது.
குறை,நிறை இருக்கத்தான் செய்யும்.
"நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே" என்றார் கடவுள்.
கழுகு வலிமையானது.
குயில் பாடும் திறன் பெற்றது.
கிளி பேசும் ஆற்றல் பெற்றது.
உனக்குத்தான் தகுதிகள் அதிகம்.
எனவே, அதை எண்ணிப் பெருமைப்படு என்று சொல்லி கடவுள் மறைந்தார்.
நீதி:
குறைகளையே காலம் முழுவதும் நினைத்து கொண்டு இருக்காமல், உன் நிறைகளை அறிந்து அதை
மேலும் நன்கு வளர்த்து கொண்டு சிறப்புடன் வாழ்வதே "இனிய வாழ்க்கையாகும்."
Saturday, June 5, 2021
தற்பெருமை கூடாது
காட்டில் சிங்கம் ஒன்று அயர்ந்து படுத்துக் தூங்கி கொண்டு இருந்தது. அப்பொழுது அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.
அதுவரை சும்மா இருந்த சேவல் கொக்கரக்கோ எனக் கூற ஆசைப்பட்டு உடன் சத்தமாக கூவியது.
சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும் நன்றாகத் தூங்கித் கொண்டிருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.
ஒருவரையும் காணவில்லை ஆதலால் மறுபடியும் படுத்து தூங்கியது சிங்கம்.படுத்துக் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.சேவலின் சத்தம் காரணமாக சிங்கத்தால் தூங்க முடியவில்லை.
கலவரமடைந்து எழுந்த சிங்கம் மரத்தின் மேலே பார்த்தது, சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.
"ஏய், ஏன் இப்படி காட்டுத்தனமாக கத்துகிறாய்? என் தூக்கத்தை கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது.
நான் எவ்வளவு அழகாக பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கிறாயே.
நான் இன்று மிகவும் மகிழிச்சியாக இருக்கிறேன்.
அதனால் பாடிக் கொண்டுதான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ "என அதிக சப்தத்துடன் கூவியது.சிங்கம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதன் இடத்தை மாற்றிக்கொண்டு வேறிடத்துக்கு ஓடும் பொழுது, அந்த வழியில் இருந்த ஒரு கழுதையை பார்க்காமல் ஓடியது, சிங்கம்.
ஆனால் கழுதையோ, சிங்கம் தன்னை கண்டு தான் பயந்து ஓடுகிறது என நினைத்து கத்தியது.
சிங்கம், திரும்பி வந்து கழுதையைத் தாக்கி கொன்றது.
நீதி:
வீண் தற்பெருமை வேதனையில் தான் முடியும்.
Friday, June 4, 2021
பூமிக்குள் :
பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் . பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்...
-
1. பேசுவதுற்கு முன் யோசியுங்கள். 2. கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள், சிறிது நேரம் அமைதியாய் இருந்து பாருங்கள். 3. "ஆழ்ந்த சுவாசம்...
-
நீதிமன்றம் ( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ) உச்ச நீதிமன்றம் : Supreme Court உயர் நீதிமன்றம் : High Court நீதித்துறை நடுவண் நீதிமன்றம்: Judi...
-
தென்னிந்தியா பற்றிய சிறப்பு தகவல்கள் : தென்னிந்திய தலைவர்கள் : தென்னாட்டு காந்தி : அறிஞர் அண்ணா . தென்னாட்டு போஸ் : பசும்பொன் முத்துராமலி...