உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட உயிர் பறிக்கும் ஆபத்துகள் அதிகமாகவே இருக்கின்றன.
ஆனால் நிறைய பேருக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதே தெரியாது.
அதை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.
ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்து சரியான அளவில் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி கூறி இருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 30 மில்லியன் மக்களுக்குமே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதில் வெறும் 37 சதவீதம் பேர் மட்டுமே இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 30 சதவீதம் பெயர் மட்டுமே உயர் இரத்த அழுத்த கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்வதாகவும் அதில் 15 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய ரத்த அழுத்தத்தை சீராகவும் வைக்க முயற்சி முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிக்கல்கள்:
உயர் ரத்த அழுத்த பிரச்சனை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. இது நம்முடைய ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டிற்கு பாதிக்கக்கூடியது
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கை தரமே பாதிக்கப்படும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்கு வைக்க முடியாமல் போகும் பொழுது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவது மட்டுமின்றி சிறுநீரகக் கோளாறுகள், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் இது உண்டாக்கும்.
நாட்டில் ஆரோக்கிய பிரச்சனைகளால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இந்த உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.
ரத்த அழுத்த பரிசோதனையின் முக்கியத்துவம்:
உயர் ரத்த அழுத்தம் என்பது திடீரென வந்து போகும் பிரச்சனை அல்ல..
இது நீண்ட நாட்களாக ரத்த அழுத்தத்தில் மாறுபாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் பெரும்பாலானவர்களுக்கு ஆரம்ப காலம் முதலே இது எந்த வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை.
நாள்பட்ட உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படும்போது தான் இதன் விளைவு வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.
பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்கு தயங்குவார்கள்.
அது மிகவும் ஆபத்தானது.
பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ ரத்த அழுத்தத்தின் அளவை குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து க்கொள்ள முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.
ஒருவேளை ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ரத்த அழுத்தம் இல்லை போகும் போது மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும்.
செய்யும் தவறு:
உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் பலரும் செய்யும் தவறு இதுதான்.
ரத்த அழுத்த பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வார்கள்.
தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்..
அந்த சமயத்தில் பரிசோதனை செய்து தங்களுக்கு ரத்த அழுத்தம் சீராக தானே இருக்கிறது என்று இடையிலேயே எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நிறுத்தி விடுவார்கள் இது மிக ஆபத்தான ஒன்று.
மருத்துவ ரீதியாக இதுபோல் செய்வது மிக தவறு என்று இந்திய மருத்துவ கழகம் குறிப்பிடுகிறது.
இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை குறித்த போதிய அளவு விழிப்புணர்வு இல்லாதது.