உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள்.
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.
அப்படி ஒரு நாளைக்குப் போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள் இல்லையா?
இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன.
அதில் முக்கியமானது வைட்டமின் டி.
இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்குக் கிடைக்கிறது.
அதிகாலை சூரிய ஒளியில் இருந்து
ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.
ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர்.
தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை.
இதனால்தான்
திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எப்படி வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் ஆகிறது?
உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை.
மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது.
இதனால் உடல் பருமன் ஆவது தடுக்கப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது.